அதிதி சங்கருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணமா

நடிகை அதிதி சங்கருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணமா என்ற செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

விரும்பன் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அதிதி சங்கர், இவர் டைரக்டர் ஷங்கரின் மகளாவார். ரீசண்டா தான் இவர் நடித்த மாவீரன் படம் வெளியாகி, இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் கூட இவருக்கு பெரிய ஃபேன்ஸ் பட்டாளமே உள்ளன.

Aditi Shankar Marriage

இந்த நிலையில் அதிதி சங்கருக்கு அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் திருமணம் செய்ய உள்ளதாகவும் சோசியல் மீடியாக்களில் பேசப்பட்டு வருகின்றன. அவரது தந்தை டைரக்டர் ஷங்கர் தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதித்தி சங்கருக்கு கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் கூறினார் என்று பேசப்படுகிறது. இந்த செய்தி கேட்டதும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில்தான் அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கேள்விக்கான பதிலை ஸ்டோரியாக போட்டுள்ளார். அதில் அவர் நானும் மிகுந்த ஆவலாக தான் இருக்கிறேன் மாப்பிள்ளை யார் என்று கூறுங்கள் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்? என்று கூறி பதிவிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் பொழுது இந்த செய்தி பொய்யான செய்தியாக இருக்கும் என்று சோசியல் மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment