சந்திரமுகி 2 படத்தின் ஃப்ரஸ்ட் லுக் வெளியீடு

ரஜினி, பிரபு, வைகை புயல் வடிவேலு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி ஆகும். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்றது. அந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போ வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சுமார் 18 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கின்றது.

எனவே தற்போது, சந்திரமுகி 2 வின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. 2005 இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. பி வாசு இயக்கத்தில் வெளியான இப்படம் ரஜினிகாந்த் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்ததுநமக்கு தெரிந்த ஒன்றே.

chandramukhi 2 first look
Chandramukhi 2 First Look

இப்படத்தில் வரும் வேட்டையின் கதாபாத்திரம் மற்றும் வடிவேலின் நகைச்சுவை இன்றளவும் மக்களின் மனதில் நீங்காமல் நிலைத்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதைத்தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசுவே இயக்கியுள்ளார். இதில்பெரிய மாற்றம் என்னவென்றால் ரஜினிக்கு பதிலாக பேட்டி என் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் மற்றும் கனரா வத், வடிவேலு, லட்சுமிமேனன் மேலும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து படக்குழுவினர் வேட்டையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராகவா லாரன்ஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கம்பீரமாக தோற்றமளிப்பதை நம்மால் காண முடிகின்றது. வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லமால் இப்படம் முந்தைய பாகத்தை விட இன்னும் நன்றாக இருக்கும் என்று பெரிதளவில் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Comment