டிடி ரிட்டர்ன்ஸ் படம் எப்பிடி இருக்கிறது

இந்த வாரம் திரைக்கு வந்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் திரைவிமர்சனம் பற்றி இப்பதிவில் காணலாம். இயக்குனர் பிரேம் ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் இந்த படத்தில் நடித்துள்ள சந்தானம் அவருக்கு பல சுமாரான படங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி படமாக டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளது என்ற படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

dd returns
DD Returns

இந்த படத்தின் கதை பேய் காமெடி படமாக இயக்குனர் அவர்கள் எடுத்துள்ளார். அதாவது ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு பேய் பங்களா அந்த பங்களாவில் குடி போகும் ஹீரோ மற்றும் சிலர், அதன் பிறகு அங்கு நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை காமெடி நிறைந்த பேய் படமாக மிகவும் நன்றாக எடுத்து உள்ளார் இயக்குனர். சந்தானத்திற்கு இந்த மாதிரியான கதைக்களம் முன்பே பழக்கப்பட்டு இருந்ததால், இந்த படத்தில் அவரின் நடிப்புத் திறமை கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது என்பதே நிதசமான உண்மை ஆகும்.

குறிப்பாக இந்த படத்தை சுட்டி குழந்தைகள் முதல் குடும்பம் வரை அனைவரும் கண்டிப்பாக பார்த்து வயிறு குலுங்க சிரித்து விட்டு வீட்டுக்கு போகலாம் என்ற அளவிற்கு இந்த படத்தின் காமெடி சூப்பராக இருக்கிறது என்றே கூறலாம்.

இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர், அவர்களுக்கான இடத்தை சரியாக அமைத்து தந்துள்ளார் என்பது கதையை இன்னும் வலுவாக எடுத்துச் சென்றுள்ளது என்று சொல்லலாம். வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களாகிய நம்மை அனைவரையும் வயிறு குலுங்க சிரித்து வைக்கிறது என்ற அளவிற்கு அவர்களின் நடிப்பு மட்டும் காமெடியும் இருந்து உள்ளது.

படத்தின் முதல் பாதியில் இருந்து கதையை ஆரம்பித்து சூடு பிடித்து நம்மை இறுதி கட்டத்திற்கு வரை எந்த ஒரு சலிப்பும் இல்லாமல் எடுத்து சென்றுள்ளது என்பது நம்மை படம் முடியும் வரை சீட்டிலிருந்து நகராமல் இருக்க வைத்துள்ளது. கொடுத்த காசுக்கு நல்ல ஒரு படம் டிடி ரிட்டர்ன்ஸ் ஆகும்.

Leave a Comment