பாலிவுட் நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

2006 ஆம் ஆண்டு எஸ் ஜே சந்திரசேகர் தயாரிப்பில் வெளியான ‘கேடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு மீண்டும் பாலிவுட் இருக்கு நடிக்க சென்றார் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து விஜயின் நண்பன் படத்தில் ரியின்றி கொடுத்தார் இலியானா.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்று பதிவிட்டு இருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ஏனென்றால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த பிரபலமான புகைப்பட கலைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்று இணையதளத்தில் கிசுகிசு பரவி வந்தன பிறகு இருவரும் பிரிந்து விட்டன என செய்தி வந்தன.

Ileana Baby
Ileana Baby

பிறகு கத்ரீனா கைப்பின் சகோதரரும் இலியானாவும் காதலித்து வருகின்றன என செய்திகள் உலா வந்து கொண்டிருந்தனர் இதற்கு இலியானா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் தான் கர்ப்பமாக உள்ளேன் என்ற பதிவையும் வெளியிட்டு இருந்தார் ஆனால் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று அவர் கூறவில்லை.

ஆனாலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேபி பம்ப் புகைப்படத்தையும் பதிவிட்டு வந்து கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து தனது காதலர் புகைப்படத்தை முகத்தை மட்டும் மறைத்து விட்டு அதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டார். அப்பதிவில் குழந்தையின் பெயர் ‘கோ பீனிக்ஸ் டோலன்’ மற்றும் எங்கள் அன்பு இனிய இளவரசரை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று இதை விவரிக்க வார்த்தை இல்லை என்றும் அப்பதிவில் கூறியுள்ளனர்.

ஆனால் இதுவரையிலும் அக்குழந்தையின் தந்தை யார் என்று இலியானா இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இச்செய்தியை கண்ட ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர் மற்றும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர் அது மட்டும் இன்றி பிரபல திரை உலகினரும் இலியானாவுக்கு வாழ்த்து கூறி வந்துள்ளனர்.

Leave a Comment