ஜெயிலர் ஆடியோ லான்ச்ல் ரஜினி விஜய் மீது மறைமுகமாக காட்டம்

உலகநாயகன் கமலஹாசன் விஜய் பற்றி கூறிய இருக்கு கருத்து தற்போது ஜெயிலர் ஆடியோ லான்ச்ல் பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்!!! வாருங்கள் முழு விவரம் என்ன என்று பார்க்கலாம்.

கமலஹாசன் தசாவதாரம் படம் ஆடியோ லான்ச்சில் விஜய் பற்றி கூறிய கருத்து என்னவென்றால் ‘இவர் நடித்த படம் பெயர் வேண்டுமானால் குருவி ஆக இருக்கலாம் ஆனால் இளம் வயதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெற்றி வானில் வட்ட விடும் பருந்து இவர்’ என்று கூறியிருந்தார்.

jailer audio launch
Jailer Audio Launch

அந்த நிலையில், இப்பொழுது நடந்து முடிந்த ரஜினி நடித்த ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் கமல்ஹாசன் தளபதி விஜய்க்கு கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்குமாறு பேசி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜெய்லர் ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசிய கருத்து அனைத்தும் தளபதி விஜயை மறைமுகமாக தாக்குமாறு அமைந்தது. அது மட்டும் இன்றி ஒரு பாடலில் ‘பெயரை பறிக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க 100 பேரு’ என்ற லிரிக்ஸ் வைத்தும் மறைமுகமாக தளபதி விஜயை தாக்கியுள்ளார். இதைப் பார்த்த தளபதி விஜயின் ரசிகர்கள் ரஜினிகாந்த் அவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தளபதி விஜய் பல தருணங்களில் கூறியுள்ளார், நான் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் என்று. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தளபதி விஜயை காட்டமாக விமர்சித்துள்ளார். இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் மீது பெரும் கோபத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் கூறும் கருத்து என்னவென்றால் இவர் நடிக்கும் படங்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும்தான், அதனால் வரும் தலைமுறையினரை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த மாதிரி விமர்சிக்க கூடாது என்று ரசிகர்கள் அவர் மீது கோபமாக உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பாட்ஷா, முத்து, அண்ணாமலை போன்ற பல படங்கள் இன்னும் நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றன. அதனால் தான் இன்னும் அவர் சூப்பர் ஸ்டார் ஆக உள்ளார். ஆனால் தற்போது அவருக்கு வயதாகி விட்டது, அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற வாக்குவாதத்தில் மக்கள் அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் ரஜினிகாந்த் தளபதி விஜயை காட்டமாக ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் விமர்சித்துள்ளார்.

Leave a Comment