ஜெயிலர் ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் வெற்றி படமா

ஜெயிலர் திரைப்படம் ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் வெற்றி படமாக அமையுமா! மக்களின் கருத்து என்ன?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இருவருக்குமே இத்திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் உள்ளனர் ஏனென்றால் நெல்சனின் முந்தைய படமான ‘பீஸ்ட்’ மற்றும் ரஜினிகாந்தின் முந்தைய படமான அண்ணாத்த இவ்விரு திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை.

அதனால் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது இந்நிலையில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தை பற்றி மக்களின் கருத்து என்னவென்று பார்க்கலாம்.

jailer movie tamil
Jailer Movie Tamil

இக்கதை ஆரம்பம் என்னவென்றால் நகர்ப்புறத்தில் கும்பல் ஒன்று கோயில் சிலைகளை திருடி வெளிநாட்டிற்கு கடத்துகிறது. இதை தடுக்க பல வருடங்களாக முயன்று வருகின்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் வசந்த் ரவி. எதற்கும் வளைந்து கொடுக்காத அவரை சிலை கடத்தும் கும்பலின் தலைவன் கடத்திக் கொன்று விடுகிறார். இதனால் உடைந்து போன வசந்த் ரவியின் தந்தையும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான முத்துவேல் பாண்டியன் அதாவது ரஜினிகாந்த் தன்னுடைய மகனுக்காக பழி வாங்க புறப்படுகிறார்.

பல சண்டை காட்சிகள் கொலைகளை கடந்து சிலை கடத்தும் கும்பலின் தலைவனை அடைகிறார். ஆனால் ரஜினிகாந்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி சிலை கடத்தலின் கும்பலின் தலைவன் தனக்கொரு வேலையை செய்ய சொல்கிறான் அவன் சொன்ன வேலையை ரஜினிகாந்த் செய்கிறாரா இல்லையா என்பதுதான் மீதி கதை.

இப்படத்தில் ரஜினிகாந்த் இருக்கு புதுமையான ஓப்பனிங் காட்சியை வைத்துள்ளார் நெல்சன் மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் ஆரவாரம் செய்யாமல் ஒரு குடும்பத் தலைவனாக ரஜினியை காட்டுகின்றன. மேலும் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்துள்ளார் இதை பார்க்கும் பொழுது 90ஸ் கிட் இருக்கு அருணாச்சலம் படம் தான் நினைவிற்கு வரும்.

மேலும் யோகி பாபுவின் நகைச்சுவை படத்தில் குறிப்பிடத்தக்கது அதுமட்டுமன்றி நெல்சனின் பிளாக் காமெடி படத்திற்கு பெரும் வெற்றியை பெற்று தர வாய்ப்புள்ளது. ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார் அவர்கள் அனைவரும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி கொண்டு இருந்த நிலையில் இப்படம் வெளியாகி முதல் நாளில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆகையால் இப்படம் மாபெரும் வெற்றி அடைய அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Comment