ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோல் பண்ணி உள்ளார் 100% உறுதி ஆகிவிட்டது

டைரக்டர் அட்லீ தயாரிப்பில் நடிகர் சாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் ஜவான். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபமாக தான் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஜவான் படத்தில் தளபதி விஜயும் கேமியோ ரோல் பண்ணியிருக்காரு என கூறப்பட்டது ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் படத்தில் உள்ள இருந்து வரவில்லை.

சமீபத்தில் வெளியான டீசரில் கூட ஒரு பிரேமில் தளபதி விஜய் இருக்கிறார் என கூறப்பட்டது பின்னர் அது தளபதி விஜய் இல்லை சாருக்கான் என உறுதி செய்யப்பட்டது. இச்செய்தியை கேட்ட தளபதி ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டன. ஏனென்றால் ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோல் பண்ணி இருந்தால் வெறித்தனமாக இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தனர் விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் எந்த ஒரு அதிகாரபூர்வ அப்டேட்டும் இதுவரை வரவில்லை.

jawan vijay
Jawan Vijay

ஆனால் தற்போது தளபதி விஜய் ஜவான் படத்தில் இருக்காரு கேமியோ ரோல் பண்ணி இருக்காரு என செய்தி 100% உறுதி ஆகிவிட்டது. சமீபத்தில் ஜவான் படத்தின் ஃபைட் மாஸ்டர் யானிக் பென் இன்டெர்வியூ ஒன்றில் கூறியுள்ளார், அதவாது தளபதியும் ஷாருக்கானும் ஒரே பிரேமில் வருவார்கள். அதுவும் ஒரு பைட் சீன் என வாய் தவறி கூறிவிட்டார், பின்னர் சுதாரித்துக் கொண்டார். பின்னர் தளபதி என குறிப்பிட்டது விஜய் சேதுபதி தான் என்று சமாளித்துக் கொண்டார்.

ஆனால் தளபதி விஜய் இருக்காரா இல்லையா என்று அதிகாரபூர்வமாக என்னால் எதுவும் கூற முடியாது என சமாளித்து விட்டார். ஜவான் படத்தின் பைட் மாஸ்டர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் தளபதியை பற்றி வாய் தவறி கூறிவிட்டார். அவர் கூறிய அந்த செய்தி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை கண்ட விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் ஜவான் படத்தில் கண்டிப்பாக கேமியோ ரோல் செய்துள்ளார் என நம்புகின்றனர். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஜவான் படத்தில் தளபதி விஜய் இருக்காரா இல்லையா என்று பார்க்கலாம்.

Leave a Comment