காணாமல் போன கரகாட்டக்காரன் படத்தின் நாயகி கனகா

காணாமல் போன கரகாட்டக்காரன் படத்தின் நாயகி கனகா என்னவாயிற்று என்று பார்க்கலாம் வாருங்கள்.

1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் மற்றும் இளையராஜா இசையில் வெளியான படம் கரகாட்டக்காரன். இப்படம் பட்டி தொட்டி எங்கும் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் கதாநாயகனாக ராமராஜனும், கதாநாயகியாக கனகாவும் நடித்துள்ளனர்.

kanaka
Kanaka

இப்படத்தில் நடித்த கனகாவின் தற்போதைய நிலை என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. கனகாவின் முதல் படம் கரகாட்டக்காரன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் தான் இவர் நடித்தார் பிறகு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை.

இவரைப் பற்றிய நிறைய கருத்துக்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. ஆனால் இதில் உண்மை எது பொய் என கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சமீபத்தில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த கங்கை அமரன் நடிகை கனகாவுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றார். தயவு செய்து ஊடகங்கள் அனைத்தும் சென்று அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பேட்டில் உருக்கமாக பேசினார்.

நடிகை கனகா சிறு வயது முதல் தனது தாயார் கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்தார் இவரது தாயார் தேவிகா இவரும் ஒரு பலம்பெரும் நடிகை ஆவார். ஆனால் இவருக்கு தனது மகன் கனகாவை திரைத்துறைக்கு அனுப்புவதில் துளி கூட விருப்பமில்லை கங்கை அமரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது மகளை நடிக்க அனுப்பினார். கனகாவின் தாயாரும் சூட்டிங் ஸ்பாட் இடத்திற்கு வந்து கனகாவிற்கு பாதுகாப்பாக இருந்தார். பிறகுதான் கங்கை அமரன் கனகாவிற்கு ஒரு மேனேஜரை வைத்துக் கொள்ள சொன்னார். அவர் கனகாவின் அனைத்து கால்ஷீட் டேட்டையும் முடிவு செய்து கொள்வார் என்று சொன்னார்.

கனகாவின் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்தது, அவரின் முதல் பிரச்சனை அவரது தந்தையின் மூலமாக வந்தது. தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டிற்குள்ளே முழுங்கினார் கனகா. இந்த சூழ்நிலையில் தான் கனகாவின் மேனேஜருக்கு கனகாவின் மீது ஒரு தலை காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கனகாவின் தந்தை மேனேஜருக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த கனகா நாளடைவில் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் மோசமான நிலையை சந்தித்தார். திடீரென்று ஒரு நாள் அதிர்ச்சி செய்தியை கேட்டு கனகா இன்னும் மனம் உடைந்தார். அவர் கேட்ட செய்தி தனது மேனேஜர் இறந்து விட்டார் என்பது அவருக்கு தெரிய வருகிறது. அவர் தன்னை ஒருதலையாக காதலித்து வந்தார் என்று இதை அறிந்த கனகாவின் மனநிலை இன்னும் மோசம் ஆகிவிட்டது.

இன்றளவும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இச்செய்திகள் அனைத்தும் தற்போது இணையதளத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Comment