1000 கோடி வசூலை ஈட்டுமா தளபதி 67 லியோ படம்?

ஆயிரம் கோடி வசூலை ஈட்டுமா தளபதி 67 லியோ படம் என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர்.

அதில் பத்திரிகையாளர் ஒருவர் லியோ படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா? என்று கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் அவர்கள் சாமர்த்தியமாக, லியோ படம் ஆயிரம் கோடி வசூலோ=வசூலிக்குமா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ரசிகன் ஒவ்வொருவரும் படத்தை பார்க்க செலவிடும் 150 ரூபாய் மேல தான் என்னுடைய முழு கவனமும் உள்ளது என்று கூறினார்.

Leo 1000 Crores

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தின் உரிமைகள் கோடிக்கணக்கில் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன நிலையில் கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூலை ஈட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கேள்வி பத்திரிக்கையாளர்களால் எழுப்பப்பட்டது.

ஏனெனில் இந்த படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும் மற்றும் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறலாம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் லியோ படம் லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் வரலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி லியோ படம் லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் வந்தால் கண்டிப்பாக இந்த படம் உலக அளவில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது இந்தியாவில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தை முடிக்க லோகேஷ் கனகராஜ் அவர்கள் 150 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்த படத்தின் முதல் பாடல் “நான் ரெடி வரவா” என்ற விஜய் பாடிய பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. அதில் உங்களுக்கு எப்பொழுது கல்யாணம் ஆகும் என்ற கேள்வியை லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கேட்ட போது அவர் பர்சனல் விஷயங்கள் எதுவும் இப்போது கேட்க வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார்.

Leave a Comment