மாவீரன் படம் எப்படி இருக்கிறது | Maaveeran Movie Review Tamil

Maaveeran Movie Review Tamil – ஏற்கனவே மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த நிலையில் அது 77 இலட்சம் பார்வையாளர்களை கடந்து இன்னும் நிறைய பார்வையாளர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த நிலையில் மாவீரன் திரைப்படம் இயக்குனர் மடோண் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஸ்கின், கவுண்டமணி, யோகிபாபு மற்றும் பலர் ஆகியோரின் நடிப்பில் திரைக்கு ஜூலை 14 வெள்ளிக்கிழமை திரைப்படம் திரைக்கு வெளி வந்துள்ளது. இந்த திரைப்படத்தின் திரை விமர்சனம் பற்றி சுருக்கமாக இப்பதிவில் காண உள்ளோம்.

Maaveeran Movie Review Tamil
Maaveeran movie tamil

இப்படத்தின் கதை என்னவென்றால் சென்னையில் குடிசை பகுதியில் வசிக்கும் மக்களை குடிசை மாற்று வாரியத்திலிருந்து உங்கள் வீடுகளையெல்லாம் காலி செய்துவிட்டு வாருங்கள், உங்களை குடுசை வீட்டிலிருந்து அடுக்கு மாடி வீட்டுக்கு மாற்றி விடுகிறோம் என்று கூறி அழைத்து செல்கிறார்கள். ஆனால் அந்த வீடுகளோ அவை கட்டும் போதும் ஏற்பட்ட ஊழல் காரணமாக தரம் அற்றதாகஈடில் கட்டப்பட்டு இருக்கிறது.

எனவே அந்த வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை வருகிறது, இப்படியே போனால் வீடு இடிந்து விழும் என்ற நிலைக்கு தள்ளப்படும் என்று நிலையில், இதனை எதிர்த்து பேச தைரியம் இல்லாத படத்தின் ஹீரோ இந்த சூழ்நிலையையே சமாளித்து வாழ்ந்து வருகிறார்.

இதன் பிறகு ஹீரோவுக்கு ஒரு சக்தி வந்து, அதனை வைத்து இவர் எப்படி வில்லனை எதிர்த்து நிற்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் முதல் பாகம் மிகவும் நன்றாக இருந்தது, அனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் அந்த அளவுக்கு இல்லை என்ன்றும் ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.

படத்தில் யோகி பாபுவின் காமெடிகள் மிகவும் நகைச்சுவையாக இருந்து இருந்ததது என்று கூறலாம். அது மட்டுமில்லாமல் மிஷ்கினின் வில்லன் ரோல் நன்றாக இருந்தது என்றே கூறலாம்.

எனவே இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு சுமாரான படமாக தான் இருந்து உள்ளது என்றே கூறலாம். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இறுதியில் பகுதி-2க்கு வழி கொடுத்து இருக்கிறார்கள்.

Leave a Comment