ஒபென்ஹெய்ம்ர் அணுகுண்டு விஞ்ஞானியின் வரலாறு (Oppenheimer Tamil Review)

Oppenheimer Tamil Review – ஹாலிவுட்டில் இருந்து களம் இறங்கியுள்ள பீக்கி பிளைண்டர்ஸ் கதாநாயகன் நடித்த ஒபென்ஹெய்ம்ர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் பற்றி இப்பதிவில் காண்போம். ஏற்கனவே ஒபென்ஹெய்ம்ர் திரைப்படம் ட்ரைலர் வெளிவந்த நிலையில், மக்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என்ற அளவிற்கு இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இருந்தது. ஆனால் இந்த படம் OTT தளத்தில் வெளியிடாமல், நேரடியாக திரையரங்குங்களில் பார்பி படத்திற்கு போட்டியாக வெளியிடப்பட்டது.

Oppenheimer Tamil

இந்த படத்தில் சிலியன் மர்பி (ஜே. ராபர்ட் ஓபன்ஹைமர்), புளோரன்ஸ் பக் (ஜீன் டாட்லாக்), ராபர்ட் டவுனி ஜூனியர் (லூயிஸ் ஸ்ட்ராஸ்), எமிலி பிளண்ட் (கிட்டி ஓபன்ஹைமர்), ஜாக் குவைட் (ரிச்சர்ட் ஃபெய்ன்மேன்), ரமி மாலேக் (டேவிட் ஹில்) என மிகப்பெரிய ஹாலிவுட் பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

இந்த படத்தை இன்டெர்ஸ்டெல்லர், டார்க் நைட், டேனட் போன்ற படங்களை இயக்கிய நோலன் அவர்கள் இயக்கி உள்ளார்.

இந்த படம் ஜூலை 21 வெள்ளி கிழமை அன்று திரைக்கு வந்ததது, அந்த நிலையில் படத்தை பார்த்தவர்கள் நல்ல விமர்சனத்தையே கூறி இருக்கின்றனர். இந்த படத்தின் திரைக்கதையை சுருக்கமாக சொல்ல போனால் அணுகுண்டை கண்டு பிடித்த அமெரிக்கா விஞ்ஞானி ஆன ராபர்ட் ஒபென்ஹெய்ம்ர் அவோரட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுத்து உள்ளனர்.

Oppenheimer tamil trailer

இந்த கதை கொஞ்சம் புரியாமல் இருப்பதால், கூர்ந்து தான் கதையை கவனித்து பார்த்து புரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இயற்பியல் சம்பந்தமான வார்த்தைகள் அதிகம் இடம் பெற்று இருப்பதால் கொஞ்சம் கதை புரியாமல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

IMDB இந்த படத்திற்கு 8.8 ரேட்டிங் கொடுத்து உள்ளது. இந்த படம் கூடிய விரைவில் OTT-க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான பொழுதுபோக்கு படமாக இல்லாமல் இந்த படம் முற்றிலும் வேற மாதிரி இருந்தது. முதல் பாதியில், ஏராளமான உரையாடல்கள் மற்றும் கருப்பு, வெள்ளை மற்றும் வண்ண காட்சிகளுக்கு இடையிலான ஏற்ற இறக்கங்கள் அவ்வளவு நல்லாக இல்லை, இது சாதாரண பார்வையாளர்களை மட்டும் ரசிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. அது மட்டுமில்லாமல், இடஙக படத்தில் பெரும்பாலும் அறிவுசார் அளவிற்கும் அல்லது இயற்பியல் உரையாடல்களும் பார்வையாளர்களை எப்படி ரசிக்க வைக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது. கிறிஸ்டோபர் நோலன் இந்த திரைப்படத்தை நல்ல ஒரு வாழ்கை வரலாறுக்கு தேவையான அளவிற்கு தான் எடுத்து உள்ளார்.

Leave a Comment