சின்னத்திரை நடிகையின் கணவர் மாரடைப்பால் மரணம்!

சின்னத்திரை நடிகை சுருதி சண்முகப்பிரியா கோயம்புத்தூரை சேர்ந்த இவர் நாதஸ்வரம் சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் பிற்காலங்களில் பல தொடர்களில் மிக முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

இவருடைய கணவர் அரவிந்த் சேகர் ஆவார் இவர் சிவில் இன்ஜினியர் முடித்துவிட்டு பாடி பில்டராக இருந்து வந்தார். இவருக்கு பிட்னஸ் என்பது உயிர் போன்றது எப்பொழுதும் பிட்னஸ் ஃப்ரீக்காக இருக்க விரும்புவார். இவர் கடந்தாண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

சுருதி சண்முகப்பிரியா
சுருதி சண்முகப்பிரியா & அரவிந்த் சேகர்

சுருதி சண்முகப்பிரியாவும் அரவிந்த் சேகரும் கடந்த 2022 ஆண்டு திருமணம் செய்து செய்து கொண்டனர். இருவரும் கப்பிள்ஸ் வீடியோ செய்து இணையதளத்தில் பதிவிட்டு வந்தனர் இவர்களுக்கு hatters என்பது கிடையாது ஏனென்றால் இவர்கள் பதிவிடும் வீடியோ அனைத்தும் நிஜ வாழ்வில் ஏற்ற மாதிரி இருக்கும் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தனர்.

நன்றாக போய்க்கொண்டிருந்த இருவர் வாழ்க்கையில் ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது அதுதான் அரவிந்த் சேகரின் மரண செய்தி. ஆம் சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் சேகர் திடீர் மாரடைப்பாள் மரணம் அடைந்தார் இச்செய்தி சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரவிந்த் சேகர் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதித்துவிட்டு இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்ற செய்தியை கூறியதும் சண்முக பிரியாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை மனம் உடைந்தார். அரவிந்த் சேகரின் இறப்பு செய்தி கேட்டு பிரபலங்கள் பல நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இச்செய்தி பரவலாக இணையத்தில் உலா வந்தது, அதில் இணையவாசிகள் பல தவறான செய்திகளை பரப்பி வந்தனர் இதனை அறிந்த சுருதி சண்முகப்பிரியா தனது கணவர் மாரடைப்பால்தான் மரணம் அடைந்தார் என்று ஒரு வீடியோவை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவரது சந்தேகத்தையும் மற்றும் பொய்யான தகவலை பரப்பவர்களுக்கு பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இவரின் மாரடைப்பிற்கு மருத்துவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் உடலை கட்டுக்கோப்பாக வைப்பது முக்கியமல்ல அதற்கு சரியான வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். கொரோனா விற்கு பிறகு இளைஞர்களுக்கு அதிகம் மாரடைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை கேட்டு தாங்களும் மிகவும் வருந்துகிறோம். அரவிந்த் சேகரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

Leave a Comment