லட்சுமிமேனன்யுடன் கல்யாணம் முற்றுப்புள்ளி வைத்தார் விஷால்

என்னது விஷாலுக்கும் மற்றும் லட்சுமிமேனன் அவர்களுக்கும் கல்யாணமா?. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் விஷால் மற்றும் நடிகை லட்சுமிமேனன் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக ஒரு செய்தி பரவலாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

vishal denies wedding rumours with lakshmi menon
Vishal denies marriage rumours with lakshmi menon

இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்கள் இந்த விஷயத்திற்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைப்பக்கத்தில் ட்வீட் மூலம் ரிப்ளை கொடுத்துள்ளார்.

அதில் விஷால் அவர்கள் குறிப்பிட்டது என்னவென்றால் பொதுவாக நான் பொய்யான மற்றும் வதந்தி செய்திகளுக்கு அவ்வளவு அதிகமாக முன்னுரிமை மற்றும் ரிப்ளை கொடுக்க மாட்டேன் என்று கூறியதோடு, இந்த மாதிரியான கருத்துக்கள் எனக்கு தேவையில்லாத ஒன்றே ஆகும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை லஷ்மி மேனன் மற்றும் எனக்கும் கல்யாணம் ஆகப்போகிறது என்ற செய்தி முற்றிலும் தவறான மற்றும் பொய்யான தகவலாகவும் ஆகும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த விஷயத்தில் ஒரு பெண் இருப்பதால் தான், இந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறி குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் அவர் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரும் தவறான கருத்தை தன்னோடு சேர்த்து பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் தான் எப்பொழுது கல்யாணம் செய்வேன் என்பதை தானே அறிவிப்பேன் என்பதையும் கூறியுள்ளார். இதன் மூலம் லஷ்மி மேனனுக்கும் மற்றும் தனக்கும் கல்யாணம் நடக்கப்போகிறது என்ற வதந்திக்கு இந்த ட்விட்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால்.

2019 ஆம் ஆண்டு நடிகர் விஷாலுக்கு மற்றும் மனிஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு கல்யாணம் நின்றது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதற்கு காரணமாக விஷால் அவர்கள் ஒரு இன்டர்வியூவில், எங்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தது தான் இதற்கு காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்த பொய்யான செய்திக்கு விஷாலின் ரிப்ளைக்கு பிறகு, அவரது ரசிகர்கள் கூடிய விரைவில் கல்யாணம் பற்றிய நற்செய்தி உங்களிடம் இருந்து வரும் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறி வருகின்றன.

Leave a Comment